உதைபந்தாட்டத்தில் வீரர்களின் நிலைகள்

உதைபந்தாட்டவிளையாட்டு வெறுமனே பந்தை Goal ற்கு அனுப்பினால் போதும் என்ற அடிப்படையில் தான் எம்மில் பலரால் பார்க்கப் படுகிறது பந்தை தடுக்கும் கோல்காப்பாளர் தவிர ஏனைய 10 வீரர்களுக்கும் உரிய நிலைகள் மிக முக்கியமானவை வெறுமனே பந்தை கோலுக்கு அனுப்புவது மட்டும் முக்கியமில்லை களத்தில் பந்தை வைத்திருத்தல் எதிரணி வீர்களிடம் இருந்து பந்தை தடுத்தல் என பல்வேறுபட்ட நிலைகள் உள்ளன படத்தில் 10 வீரர்களும் எடுக்கக் கூடிய சில நிலைகள் காட்டப்பட்டுள்ளன அணிகளை பொறுத்து இந்நிலைகள் மாறுபடலாம்.



இதில் GK எனப்படுவது கோல்காப்பாளர் அவரது நிலை நிலையாக இருக்க ஏனைய 10 இடங்கள் அணிகளுக்கு அணிகள் மாறுபடும் அவற்றை பார்ப்போம்

பின்வரிசை-Defenders(Back)

பின்வரிசை அதாவது தடுப்பாட்டம் மேற்கொள்பவர்கள் இங்கு CB,RB,LB என்பன முறையே மத்திய தடுப்பாளர், வலது,இடது தடுப்பாளர்களை குறிக்கிறது இதனை விட Sweeper எனப்படும் கோல்காப்பாளருக்கு முன்னே செயற்படும் இடம் ஒன்றும் உள்ளது இது 2004 யுரோ கிண்ணப்போட்டியின் போது கிரீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய இடம் வகித்தது ஆயினும் நவீன ஆட்டத்தில் தற்போது இந்த இடம் பயன்படுத்தப்படுவதில்லை தற்காலத்தில் ஜெர்மன்,பெயர் முனிச் அணியின் கோல்காப்பாளர் இந்த நிலையில் விளையாடும் ஒருவராவர். அடுத்ததாக  CB எனப்படும் Centre Back அல்லது  மத்திய தடுப்பாளர் முற்றுமுழுதாக பந்தை தடுப்பதில் ஈடுபடுவதுடன் அவர்களின் தலையால் பந்தை தள்ளும் திறன் காரணமாக எதிரணியின்  கோல்காப்பகத்தில் கோனர் கிக்குகளில் கோல் போடுவதற்கு பயன்படுத்தப்படுவார்கள். பொதுவாக இரண்டு பேர் இந்நிலையில் விளையாடுவார்கள் LB,RB என்பன LWB, RWB ஆக  ஆக்ரோசமான ஆட்டத்தில் ஈடுபடும் சந்தர்பங்களில் 3 பேர் இந்நிலையில் விளையாடுவதும் உண்டு. அடுத்து RB,LB எனப்படும் வலது இடது புல் பக் ஆட்டக்காரர்கள் இவர்கள் எதிரணி முன்கள வீரர்களை தடுப்பதுடன் சந்தர்ப்பம் கிடைக்கும் போது முன்னேறி கோல் போடுவதற்கு உதவுபவர்களாக இருப்பார்கள் 5-3-2 முறையில் இவர்கள் தான் சிறகுகளாக தொழிற்படுவார்கள் .

மத்தியகளம்-Midfielders

ஆட்டத்தில் கூடுதலான நேரம் பந்தினை வைத்திருப்பவர்கள் இவர்கள் தான். DF எனப்படும் தடுப்பு மத்திய கள வீரர் தடுப்பாட்டத்தில் கூடுதலாக ஈடுபடுவார் CM எனப்படும் மத்திய மத்திய கள வீரர்கள் பந்துடன் சேர்ந்து இரண்டு பக்க கோல் கம்பங்களுக்கு மாறி மாறி சென்று தடுப்பாட்டம்,ஆக்ரோஷ ஆட்டம் என இரண்டிலும் ஈடுபடுவர் LM RM எனப்படும் wide Midfielders முன்கள வீரருக்கு உதவுபவராகவும் பந்தினை மத்தியில் பேணுபவராகவும் விளங்குவர் AM எனப்படும் ஆக்ரோஷ மதியகள வீரர் முன்கள வீரருக்கு உதவுபவராகவே இருப்பார் கூடுதலான கோல் போடும் சந்தர்பங்களை உருவாக்குதல் இவரின் பணி .

முன்களம்- Forward

Striker/CF அல்லது மத்திய முன்களம் ஆட்டத்தில் கோல் போடும் பணி இவரையே சார்ந்தது எதிரணியின் பின்கள வீரர்களுக்கு முன்பாகவே எப்போதும் இவர் காணப்படுவர் தனக்கு வழங்கப்படும் சந்தர்பங்களை கோலாக மாற்றுதல் இவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது . SS எனப்படும் Second Striker இடம் CF க்கு கோல் போடுவதற்கு உதவவும் எதிரணியினர் CF ஐ கணிக்கும் போது அவர்களை ஏமாற்றி கோல் போடவும் பயன்படுகிறது. LB ,RW எனப்படும் வலது,இடது சிறகுகள் மத்திய முன்கள வீரருக்கு கோல்போடும் சந்தர்பங்களை ஏற்படுத்துபவர்களாகவும் தம்முடைய சந்தர்பங்களை கோலாக்க முயல்பவராகவும் காணப்படுவர்.

அடுத்து உலகில் பிரபல்யமான சில நிலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன