உதைபந்தாட்ட அணிகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் உலக கிண்ணப் போட்டிகளின் போது மட்டும் தான் உதைபந்தாட்ட அணிகள் எமது மக்களால் பார்க்கப்படும் அடுத்த தடவை உலக கிண்ணம் இடம்பெறும் போது பழைய அணியில் விளையாடிய சிலர் இடம்பெற மாட்டார்கள் அதற்கு அடுத்த தடவை பெரும்பாலும் முழு அணியே மாறி இருக்கும் பிறகு எப்படி எம்மால் அணிகளில் ஆல்லது வீரர்களில் ஆர்வம் செலுத்த முடியும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் இந்தியா,இலங்கை,மலேசியா நாட்டு அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறுவதே இல்லை எனவே அதையும் எம்மில்  பெரும்பாலானவர்கள் கவனத்தில் கொள்வதில்லை . எமது ஒரே தேசிய விளையாட்டு கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்மட்டும் தான் அதிலும் தேசிய அணிகளை விட்டால் IPL மற்றும் Champions Leauge.

உதைபந்தாட்டம் வித்தியாசமானது இங்கு தேசிய அணிகளை விட கழகங்களே முன்னிலை வகிக்கின்றன உலக கிண்ணம் முதலான போட்டிகள் வரும்போது என்ன தான் தேசிய அணிக்கு முன்னுரிமை வழங்கினாலும் மற்றைய எல்லா தருணங்களிலும் கழக மட்ட போட்டிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும். உலக கிண்ணம் தவிர்ந்த காலப்பகுதியில்  நாடுகளுக்கு இடையிலான சினேகபூர்வ போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் கண்டங்கள் ரீதியன கிண்ண போட்டிகள், மேலும் கண்ட ரீதியான,உலக கிண்ணத்துக் காண தகுதிப் போட்டிகள் இவற்றுக்கே கழக போட்டிகளின் இடையில் இடைவெளி விடப்படும் மற்றைய எல்லா நேரங்களிலும் கழக மட்ட போட்டிகள் களை கட்டி காணப்படும்.

சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம் உதைபந்தாட்டத்தில்  கூடுதலான அதிகம் செலுத்தும் அணிகள் என எடுத்துக் கொண்டால் அவை தென் அமெரிக்கா  அல்லது ஐரோப்பாவை சார்ந்த அணிகளே ஆகும். தேசிய அணிகளில் பிரேசில்,அர்ஜென்டினா,கொலம்பியா,சிலி,உருகுவே ஆகிய தென்அமெரிக்க நாடுகளும் ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் எப்போதும் அதிகம் செலுத்தும் நாடுகளாகும் இவற்றை விட காலத்துக்கு காலம் அபிரிக்க மற்றும் ஏனைய நாடுகள் அதிகம் செலுத்தும்.

கழக அணிகளில் முற்றுமுழுதாக ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம் தான் நிரம்பி உள்ளது காரணம் தென்அமெரிக்க,ஆபிரிக்க  நாடுகளின் சிறந்த வீரர்கள் யாவரும் ஐரோப்பிய கழகங்களால் பெருந்தொகை பணம் செலுத்தி வாங்கப்படுகிறார்கள்( நம் IPL ஏலத்தில் சிறந்த வீரருக்கு கொடுக்கும் பணத்தில் கிடத்தட்ட 10 மடங்கு அதிக பணம்  பரிமாறப்படும்) எனவே தென்அமெரிக்க நாட்டு வீரர்கள் பெருமளவானவர்கள் இதனால் ஐரோப்பிய நாட்டு குடியுரிமையை  பெற்று எதிர்காலத்தில் அந்த ஐரோப்பிய அணியில் விளையாடும் வாய்ப்பு ஏற்படுகிறது. கிரிக்கெட்டில் எப்படி தென்னாபிரிக்கவின் வீரர்கள் ஏனைய அணிகளில் விளையாடுகிறார்களோ அது போல் பிரேசில் அணி வீரர்கள் பல ஐரோப்பிய தேசிய அணிகளில் உள்ளார்கள் .

கழக மட்ட போட்டிகளை எடுத்துக் கொண்டால் ஐரோப்பா கழகங்கள் தான் முற்றுமுழுதான ஆதிக்கம் செலுத்துகின்றன இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஸ்பானிஷ் லாலிகா , ஜெர்மன் வுண்டஸ்லீகா , இத்தாலி சீரியா A, பிரான்ஸ் லீக் 1 என்பன மிக முக்கியமான லீக்கள் இதனை விட நெதர்லாந்து,போர்த்துக்கல்,ரசியா,உக்ரைன் போன்ற லீக்குகளும் முக்கியமானவை. ஆண்டு தோறும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் கழக மட்ட உலக கிண்ணம் பெரும்பாலும் இந்த நாட்டு அணிகளாலே தான் வெல்லப்படும்( இந்த கிண்ணம் முக்கியத்துவம் அற்றது என்பது வேறு விடயம் )

ஐரோப்பாவில் ஒவ்வொரு லீக்கிலும் முன்னிலை வகிக்கும் அணிகள் யுரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் பங்கு பற்றும் அந்த வகையில் ஒவ்வொரு லீக்கிலும் முக்கிய இடம் வகிக்கும் அணி விபரம் கீழே தரப்பட்டுள்ளது ஒவ்வொரு சீசனுக்கும் இந்த அணிகள் மாறும் போதும் 95% மான சந்தர்பங்களில் கீழ் கண்ட அணிகள் தான் தத்தமது லீக்குகளில் முன்னிலை பெறுகின்றன.




போர்ஷ்யா டோர்ட்முண்ட்
இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஸ்பானிஷ் லாலிகாஜெர்மன் வுண்டஸ்லீகாஇத்தாலி சீரியா Aபிரான்ஸ் லீக் 1
செல்சியா பார்சிலோனாபெயார்ன் முனிச் ஜுவான்டாஸ்லியோன்
மான்செஸ்டர் யுனைட்டட்ரியல் மட்ரிட் சால்க்எஸ் ரோமாபாரிஸ் செயின்ட் ஜேர்மன்
ஆர்சனல் அட்லாட்டிகோ மட்ரிட்

பெயர் லவர்குசன்

நேபோலிமார்சலி
மான்செஸபோர்ஷ்யா டோர்ட்முண்ட் செவில்லாபோர்ஷ்யா டோர்ட்முண்ட்எசி மிலன்மொனாகோ
லிவர்பூல் போர்ஷ்யா டோர்ட்முண்ட் இன்டர் மிலன்
டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர் லாஜியோ

இந்த அணிகளை விட போர்த்துக்கலில் போர்டோ,பெனிபிகா நெதர்லாந்தின்  பிஎஸ்வி ஏய்ந்தவன் அஜஸ் சுவிஸ்லாந்தின் பாஸல்  யுக்ரேன் நாட்டு சக்வட் டோநேட்ஸ் என்பனவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தகுதி பெறும் முக்கிய அணிகளாகும்.

இந்த அணிகளில் பார்சிலோனா, ரியல் மட்ரிட், பெயார்ன் முனிச் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் பிரகாசித்து வரும் அணிகள் இவை தொடர்பான மேலதிக தகவல்கள் தனி தனி பதிவில் பார்ப்போம்.

உதைபந்தாட்டத்தில் வீரர்களின் நிலைகள்

உதைபந்தாட்டவிளையாட்டு வெறுமனே பந்தை Goal ற்கு அனுப்பினால் போதும் என்ற அடிப்படையில் தான் எம்மில் பலரால் பார்க்கப் படுகிறது பந்தை தடுக்கும் கோல்காப்பாளர் தவிர ஏனைய 10 வீரர்களுக்கும் உரிய நிலைகள் மிக முக்கியமானவை வெறுமனே பந்தை கோலுக்கு அனுப்புவது மட்டும் முக்கியமில்லை களத்தில் பந்தை வைத்திருத்தல் எதிரணி வீர்களிடம் இருந்து பந்தை தடுத்தல் என பல்வேறுபட்ட நிலைகள் உள்ளன படத்தில் 10 வீரர்களும் எடுக்கக் கூடிய சில நிலைகள் காட்டப்பட்டுள்ளன அணிகளை பொறுத்து இந்நிலைகள் மாறுபடலாம்.



இதில் GK எனப்படுவது கோல்காப்பாளர் அவரது நிலை நிலையாக இருக்க ஏனைய 10 இடங்கள் அணிகளுக்கு அணிகள் மாறுபடும் அவற்றை பார்ப்போம்

பின்வரிசை-Defenders(Back)

பின்வரிசை அதாவது தடுப்பாட்டம் மேற்கொள்பவர்கள் இங்கு CB,RB,LB என்பன முறையே மத்திய தடுப்பாளர், வலது,இடது தடுப்பாளர்களை குறிக்கிறது இதனை விட Sweeper எனப்படும் கோல்காப்பாளருக்கு முன்னே செயற்படும் இடம் ஒன்றும் உள்ளது இது 2004 யுரோ கிண்ணப்போட்டியின் போது கிரீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய இடம் வகித்தது ஆயினும் நவீன ஆட்டத்தில் தற்போது இந்த இடம் பயன்படுத்தப்படுவதில்லை தற்காலத்தில் ஜெர்மன்,பெயர் முனிச் அணியின் கோல்காப்பாளர் இந்த நிலையில் விளையாடும் ஒருவராவர். அடுத்ததாக  CB எனப்படும் Centre Back அல்லது  மத்திய தடுப்பாளர் முற்றுமுழுதாக பந்தை தடுப்பதில் ஈடுபடுவதுடன் அவர்களின் தலையால் பந்தை தள்ளும் திறன் காரணமாக எதிரணியின்  கோல்காப்பகத்தில் கோனர் கிக்குகளில் கோல் போடுவதற்கு பயன்படுத்தப்படுவார்கள். பொதுவாக இரண்டு பேர் இந்நிலையில் விளையாடுவார்கள் LB,RB என்பன LWB, RWB ஆக  ஆக்ரோசமான ஆட்டத்தில் ஈடுபடும் சந்தர்பங்களில் 3 பேர் இந்நிலையில் விளையாடுவதும் உண்டு. அடுத்து RB,LB எனப்படும் வலது இடது புல் பக் ஆட்டக்காரர்கள் இவர்கள் எதிரணி முன்கள வீரர்களை தடுப்பதுடன் சந்தர்ப்பம் கிடைக்கும் போது முன்னேறி கோல் போடுவதற்கு உதவுபவர்களாக இருப்பார்கள் 5-3-2 முறையில் இவர்கள் தான் சிறகுகளாக தொழிற்படுவார்கள் .

மத்தியகளம்-Midfielders

ஆட்டத்தில் கூடுதலான நேரம் பந்தினை வைத்திருப்பவர்கள் இவர்கள் தான். DF எனப்படும் தடுப்பு மத்திய கள வீரர் தடுப்பாட்டத்தில் கூடுதலாக ஈடுபடுவார் CM எனப்படும் மத்திய மத்திய கள வீரர்கள் பந்துடன் சேர்ந்து இரண்டு பக்க கோல் கம்பங்களுக்கு மாறி மாறி சென்று தடுப்பாட்டம்,ஆக்ரோஷ ஆட்டம் என இரண்டிலும் ஈடுபடுவர் LM RM எனப்படும் wide Midfielders முன்கள வீரருக்கு உதவுபவராகவும் பந்தினை மத்தியில் பேணுபவராகவும் விளங்குவர் AM எனப்படும் ஆக்ரோஷ மதியகள வீரர் முன்கள வீரருக்கு உதவுபவராகவே இருப்பார் கூடுதலான கோல் போடும் சந்தர்பங்களை உருவாக்குதல் இவரின் பணி .

முன்களம்- Forward

Striker/CF அல்லது மத்திய முன்களம் ஆட்டத்தில் கோல் போடும் பணி இவரையே சார்ந்தது எதிரணியின் பின்கள வீரர்களுக்கு முன்பாகவே எப்போதும் இவர் காணப்படுவர் தனக்கு வழங்கப்படும் சந்தர்பங்களை கோலாக மாற்றுதல் இவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது . SS எனப்படும் Second Striker இடம் CF க்கு கோல் போடுவதற்கு உதவவும் எதிரணியினர் CF ஐ கணிக்கும் போது அவர்களை ஏமாற்றி கோல் போடவும் பயன்படுகிறது. LB ,RW எனப்படும் வலது,இடது சிறகுகள் மத்திய முன்கள வீரருக்கு கோல்போடும் சந்தர்பங்களை ஏற்படுத்துபவர்களாகவும் தம்முடைய சந்தர்பங்களை கோலாக்க முயல்பவராகவும் காணப்படுவர்.

அடுத்து உலகில் பிரபல்யமான சில நிலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன